உயிரியல் முறைக்கட்டுப்பாடு :: பேரளவு உற்பத்தி செய்தல்

உயிரியல் முறை கட்டுப்பாட்டு காரணி – பேரளவு உற்பத்தி செயல்வழிப் படம்

தாய் வளர்ச்சி ஊடுபொருள் கலவைதயாரித்தல்:
கிங்ஸ் – பி ஊடகம் மூலம் தயாரித்தல் :

  • பெப்டோன் :  20கி
  • K2HPO4 : 1.5 கி

(டைய் பொட்டாசியம் பாஸ்பேட்)

  • Mg SO4  : 1.5 கி

( மெக்னீசியம் சல்பேட் )

  • கிளிசரால் : 10 மிலி
  • வடிநீர்  : 1000 மிலி
மேற்கண்ட நீர்நொதியினை, கூம்பு குடுவையில் ஊற்றி 15 1b அழுத்தத்தில் 15 நிமிடத்திற்கு அழுத்த அனற்கலனில் வைக்கவும். பின் குளிரச் செய்து, சிறு கம்பி வலையளவு சூடோமோனாஸ் புளோரஸ்சென்ஸ் – யை உட்செலுத்தி, 2 நாட்களுக்கு வைக்கவும்.
பேரளவு உற்பத்தி :
கிங்ஸ் – பி ஊடகம் தயாரித்து, நொதிகலனில் வைத்து, 15 1b அழுத்தத்தில் 15 நிமிடத்திற்கு கிருமி நீக்கம் செய்யவும்.
தாய் வளர்ச்சி ஊடுபொருள் கலவை 3 லிட்டருக்கு, 40 லிட்டர் நீர்நொதி சேர்த்து நொதிக்கலனில் 2 நாட்களுக்கு வைக்கவும். (அடிக்கடி கலக்கிவிடவும்). நீர் நொதியில் உள்ள பாக்டீரியா கலவையை சேகரித்து சீசைச் சுண்ணாம்புக் கல்லுடன் சேர்த்து விணியோகிக்கவும்.

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு |  பொறுப்புத் துறப்பு  | தொடர்புக்கு 
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2016